விஜய் தேவரகொண்டாவின் சட்டை ரூ.69 ஆயிரம்

ஐதராபாத்: நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ரூ.69 ஆயிரம் மதிப்புள்ள சட்டையை அணிந்து வந்தார் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், பெல்லி சூப்புலு, நோட்டா, லைகர் உள்பட பல படங்களில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. இப்போது குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு சமந்தா ஜோடி. இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க விஜய் தேவரகொண்டா வந்தார். அப்போது அவர் வித்தியாசமான சட்டை அணிந்திருந்தார்.ஒரே சட்டையில் பலவித பேட்டர்ன்கள், வெவ்வேறு துணிகள் இருப்பது போல் இது வடிவமைக்கப்பட்டிருந்தது (படத்தில் உள்ளது). Greg Lauren என்ற பிராண்டின் இந்த சட்டை, 69 ஆயிரம் ரூபாயாம். இந்த சட்டையுடன் விஜய் தேவரகொண்டா இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலானது. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் இந்த சட்டையை இணையதளத்தில் தேட ஆரம்பித்துவிட்டனர். விஜய் தேவரகொண்டாவுக்கு இந்த சட்டை பொருத்தமாக இருப்பதாகவும் கமென்ட் போட்டனர்….

The post விஜய் தேவரகொண்டாவின் சட்டை ரூ.69 ஆயிரம் appeared first on Dinakaran.

Related Stories: