வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை

 

வால்பாறை, ஏப்.26: வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ள நிலையில் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  வழக்கமாக வால்பாறைக்கு ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படும். பள்ளி விடுமுறையை முன்னிட்டு கோவை, நெல்லை, மதுரை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் கோடை விடுமுறையில் வால்பாறைக்கு வருவது உண்டு.

வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் தங்கி குளிர்ந்த சூழலை அனுபவித்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து வெகுவாக குறைந்து வால்பாறையின் பிரதான தெருவான மெயின் ரோடு மற்றும் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஹோட்டல்கள், லாட்ஜ்கள், காட்டேஜ்கள் காலியாக உள்ளது. இந்நிலை, தொடர்ந்தால் வால்பாறையின் பொருளாதார நிலை சீர் குலைந்து விடும் எனவும் வால்பாறை கோடை விழா தேதியை உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெபராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.