வல்லூர் தேசிய அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்!!

திருவள்ளூர்: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீஞ்சூரை அடுத்துள்ள வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், தேசிய அனல்மின் கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகா வாட் என 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரி கையாளுதல், சாம்பல் பிரிவு, மின் உற்பத்தி என பல்வேறு பிரிவுகளில் இங்கு 1,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையில் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, ஒப்பந்த தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாக தொடர்கிறது. தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்ச அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது. அந்த ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வல்லூர் தேசிய அனல்மின் நிலைய அதிகாரிகளிடம் ஊதிய உயர்வு வழங்ககோரிய போது,  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடியாதது எனவும், அவன்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் அலட்சியம் காட்டுகின்றனர். அதனால், அப்பகுதியில் வசிக்கும்  இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கடுமையான வறுமையில் தள்ளப்படும் நிலையில் உள்ளனர் என வேதனை தெரிவித்தனர். எனவே  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் நிரந்தர பணி வழங்கக்கோரி ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.                          …

The post வல்லூர் தேசிய அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: