2016-17ம் நிதி ஆண்டில் ரூ.1,034 கோடி வருமானம் பெற்று நாட்டிலேயே பணக்கார கட்சியாக பாஜக வலம்

டெல்லி : பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் ஒரே ஆண்டில் இரன்டு மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் 7 தேசிய கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த  2016-17-ம் ஆண்டுக்கான வரவு மற்றும் செலவு குறித்த தகவல்களை சேகரித்து அறிக்கையாக நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி  7 தேசிய கட்சிகளின் ஓராண்டு ஒட்டு மொத்த வருவாய் ரூ. 1,559.17 கோடி என்றும் பாஜகவின் ஓராண்டு வருவாய் மட்டும் ரூ. 1,034.27 கோடி  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 -2016ம் நிதி ஆண்டில் பாஜகவின் வருவாய் ஆக இருந்த நிலையில், 2016 -2017 நிதி ஆண்டில் இரண்டு மடங்காது அதிகரித்துள்ளது. இரணடாம் இடத்தில உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருவாய் ரூ. 225.36  கோடி என கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் ரூ. 100 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு கோடி ரூபாய் வருவாய் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

இதனிடையே 7 தேசிய கட்சிகளும் கடந்த 2016-17ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.1,288.26 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக பாஜக ரூ.710.05 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூ.321.66 கோடியும் செலவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானம் ரூ.173.58 கோடி என்று தெரிவிக்கப்பட்டு்ள்ளது. இதில் ரூ.51.83 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக 2016-17ம் ஆண்டில் தங்களுக்கு கிடைத்த வருமானத்தில் 96.41 சதவீதம், அதாவது, ரூ.997.12 கோடி நன்கொடை, மானியங்கள், தொண்டர்கள் பங்களிப்பு மூலம் கிடைத்தது எனத் தெரிவித்துள்ளது.அதேபோல, கடந்த 2016-17ம் ஆண்டில் தேர்தல் பிரசாரம், தேர்தல் செலவுகளுக்காக ரூ.606.64 கோடியும், நிர்வாகரீதியாக ரூ.69.78 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: