ஆந்திராவில் சுரங்கம், கனிமவளத்துறை தொடர்புடைய ஆவணங்களை எரிப்பு: தீவைத்த இருவரில் ஒருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

ஆந்திரா: ஆந்திராவில் சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை தொடர்புடைய ஆவணங்களை தீ வைத்து எரித்த நபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். ஆந்திராவில் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் துறைவாரியாக நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெண்ணமநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஏலவளகுதுரு நதிக்கரை ஓரம் அரசு ஆவணங்கள், ஹார்டிஸ்க் போன்றவற்றை இருவர் தீவைத்து எரித்தனர்.

இதை கவனித்த அப்பகுதியினர் சிலர் சுரங்கம் மற்றும் கனிமவளதுறை தொடர்புடைய ஆவணங்கள் என்பதை அறிந்து அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டுமே சிக்கிய நிலையில் பொதுமக்கள் அத்தொகுதி எம்.எல்.ஏ வுக்கு தகவல் தெரிவித்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் சுற்றுசூழல் வாரிய முன்னாள் தலைவர் சமீத் ஷர்மாவின் கார் ஓட்டுநர் நாகராஜ் என்றும் சமீர் ஷர்மாவின் உத்தரவின் பேரில் அதனை எரித்தும் தெரிந்தது. இதனை அடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஆந்திராவில் சுரங்கம், கனிமவளத்துறை தொடர்புடைய ஆவணங்களை எரிப்பு: தீவைத்த இருவரில் ஒருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: