கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பெங்களூருக்கு மாற்றம்

மும்பை: கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர், பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இமாச்சலபிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜ சார்பில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் கடந்த ஜூன் 6ம் தேதி சண்டிகர் விமான நிலையத்தில் ஒரு பெண் காவலர் தன்னை அறைந்ததாக புகார் செய்திருந்தார். அதுபற்றி வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கங்கனா தரக்குறைவாக பேசியிருந்தார். இதனால் குல்விந்தர் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது. மேலும் விவசாயிகளின் போராட்டத்தில் குல்விந்தரின் தாயும் கலந்து கொண்டிருந்ததும், கங்கனாவின் விமர்சனத்தால் குல்விந்தர் நேரடியாக பாதிக்கப்பட்டதாலும் கங்கனாவை தாக்கியது தெரியவந்தது.

இந்த செயலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. மொகாலியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவராஜ் சிங், அந்த பெண் காவலருக்கு ரூ 1 லட்சம் பரிசு அறிவித்திருந்தார். அது போல் பிரபல பாடகர் ஒருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் காவலருக்கு வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்திருந்தார். தவிர விவசாய சங்கங்களும், ‘பெண் காவலர் விவகாரத்தில் விசாரணை நியாயமான முறையில் நடத்த வேண்டும்’ என வலியுறுத்தின. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட குல்விந்தர் கவுர், பெங்களூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பெங்களூருக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: