காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: காற்று மாசுவால் டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 10 நகரங்களில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக டெல்லியில் 12,000 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த பாதிப்பு இருந்தாலும் காற்று மாசும் அதிகளவு உயிர்களை காவு வாங்கும் நிலையும் உயர்ந்து வருகிறது. டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா, வாரணாசி ஆகிய 10 நகரங்களில் அதிகளவு காற்று மாசு ஏற்படுகிறது. இதனால், இந்த பகுதிகளில் அதிகளவு மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து வெளியான ஆய்வு அறிக்கையில், ‘காற்று மாசுவால் டெல்லி, அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் ஆண்டுக்கு 30,000 பேர் உயிரிழந்து வருகின்றனர். மேலும், கடந்த 2008 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் டெல்லியில் மட்டும் 12,000 பேர் பலியாகி உள்ளனர். இதே காலகட்டத்தில் பெங்களூரில் 2,102 பேரும், குறைந்தபட்சமாக சிம்லாவில் 59 பேரும் உயிரிழந்துள்ளனர். லக நாடுகளில் உள்ள 272 முக்கிய நகரங்களில் காற்று மாசு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், கிரீஸில் 2.54 சதவீதமும், ஜப்பானில் 1.42 சதவீதமும், ஸ்பெயினில் 1.96 சதவீதமும், சீனாவில் 0.22 சதவீதமும், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,’என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: