டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். 2014-ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச சட்டப்படி நிதியை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார். 2023 மார்ச் இறுதி நிலவரப்படி ஆந்திர அரசின் கடன் ரூ.4,42,442 கோடியாக உயர்ந்துவிட்டது. ஆந்திர மாநில அரசின் மொத்த நிதிப்பற்றாக்குறை ரூ.55,817.50 கோடியாக உயர்ந்துவிட்டது.

2018-19-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ஆந்திர மாநிலத்தின் நிதி பற்றாக்குறை 55% உயர்ந்துள்ளது. கடன்களை சமாளிக்க ஒன்றிய அரசின் நிதியுதவி தேவைப்படுகிறது. போலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கு நிதி, அமராவதி நகரை ஆந்திர தலைநகராக கட்டி எழுப்ப நிதி தர வேண்டும் எனவும் பிரதமர் மோடியிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்தார்.

The post டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: