ராகுல் தாக்கு விவாதத்தில் பங்கேற்காமல் பயந்து ஓடுகிறார் பிரதமர்

புதுடெல்லி: ‘கேள்விகளுக்கு பதில் அளிக்காமலும் விவாதத்தில் பங்கேற்காமலும் பிரதமர் ஓடுவது நாடாளுமன்றத்துக்கு எதிரானது’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘ரூபாயின் மதிப்பு ரூ80ஐ தாண்டிவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் எடுத்து வருபவர் ரூ1000 கேட்கிறார். ஜூன் மாதத்தில் 1.3 கோடி பேருக்கு வேலை இல்லை. உணவு தானியங்கள் மீது தற்போது ஜிஎஸ்டி வரி சுமையும் கூடிவிட்டது. பொது பிரச்னைகளை எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது. இவற்றுக்கு எல்லாம் அரசு பதில் கூறியாக வேண்டும். விவாதங்களில் இருந்து தப்பித்து ஓடுவது மற்றும் நாடாளுமன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருப்பது நாடாளுமன்றத்துக்கு எதிரானது பிரதமர் ஜீ’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் ராகுல் தனது பேஸ்புக் பதிவில், ‘இனி பேக்கிங் செய்யப்பட்ட பால், தயிர், நெய், அரிசி, பிரட் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி உண்டு.  இந்த அரசு மக்களை மிரட்டி பணம் பறிக்கும் அரசாக உள்ளது. ஏராளமான வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு தகுதியற்ற வார்த்தைகள் என்று கூறி பிரதமர் எங்களை அமைதிப்படுத்த முயன்றாலும் அவர் இவற்றுக்கெல்லாம் பதில் கூறியே ஆகவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்….

The post ராகுல் தாக்கு விவாதத்தில் பங்கேற்காமல் பயந்து ஓடுகிறார் பிரதமர் appeared first on Dinakaran.

Related Stories: