முதியவரை தாக்கி ₹1.50 லட்சம் கொள்ளை 3 பேர் கும்பலுக்கு வலை குடியாத்தம் அருகே

குடியாத்தம், ஜூன் 22: குடியாத்தம் அருகே முதியவரை தாக்கி ₹1.50 லட்சத்தை கொள்ளையடித்த 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த நெட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் வேணு(69). இவர் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த கீழ்ஆலத்தூர் கிராமத்தில் உள்ள ஏடிஎம்மில் ₹1.50 லட்சத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் மையம் பழுது அடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அவர் பணத்துடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். நாகல் கூட்ரோடு பகுதி வழியாக மொபட்டில் வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 பேர் கொண்ட கும்பல் முதியவரை வழிமறித்துள்ளனர். பின்னர், அவரை தாக்கி அவரிடம் இருந்த ₹1.50 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து வேணு கொடுத்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து 3 பேர் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post முதியவரை தாக்கி ₹1.50 லட்சம் கொள்ளை 3 பேர் கும்பலுக்கு வலை குடியாத்தம் அருகே appeared first on Dinakaran.

Related Stories: