முதன்முறையாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு 50% நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வெளிநாடுகளுக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு 50% நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: முதன்முறையாக ஏற்றுமதி செய்பவர்களுக்கு அதிகபட்ச உச்ச வரம்பின் (எம்ஆர்எல்) சோதனைச் செலவில், சோதனை கட்டணத்தில் 50% நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், முதன்முறையாக வெளிநாடுகளுக்கு தங்கள் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு சோதனை கட்டணத்தில் 50% நிதியுதவியை தமிழக அரசு வழங்கும். இத்திட்டம் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரியத்தால் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் //agrimark.tn.gov.in/MRS/exporter என்ற இணையதளம் சென்று வருகிற 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்….

The post முதன்முறையாக ஏற்றுமதி செய்யும் விவசாயிகளுக்கு 50% நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: