மாணவர்கள் பாதிப்பு பாலிடெக்னிக் கேன்டீனுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

சென்னை: சென்னை வேப்பேரியில் செயல்படும் செங்கல்வராயன் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக, மாநகராட்சி மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதையடுத்து மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வீடு திரும்பினர். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவகத்தில் சுத்தம், சுகாதாரம், பராமரிப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் கேன்டீனை மூடி, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது: சென்னை வேப்பேரியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்தினம் 4 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று 12 மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் மாநகராட்சிக்கு வருகிறது.

மாநகராட்சி உணவு காரணமாக ஏற்பட்டு இருக்கும் என சந்தேகம் அடைந்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து எனது தலைமையில் 2 உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கல்லூரியில் உள்ள கேன்டீனை ஆய்வு செய்தோம். ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையில் உணவு மேற்கொள்வது தெரியவந்தது. இதனையடுத்து 2000 அபராதம் விதித்து கேன்டீனுக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மாணவர்கள் பாதிப்பு பாலிடெக்னிக் கேன்டீனுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: