சென்னையில் ஆண்டுதோறும் 28,000 தெருநாய்களுக்கு கருத்தடை: மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகின்றனர். மேலும், தெருக்களில் நடந்து செல்பவர்களை அவ்வப்போது தெரு நாய்கள் விரட்டி கடிப்பதால், பீதியுடன் நடமாடுகின்றனர். குறிப்பாக குழந்தைகளை நாய்கள் கடிப்பதும் சமீப காலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தெருநாய்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கையும் எடுத்து வருகிறது. சென்னையில் மாநகராட்சி பணியாளர்களால் சாலைகளில் சுற்றும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, புளியந்தோப்பு, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் 2 புதிய நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களும் சென்னையில் தொடங்கப்பட உள்ளன. சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி, ஆண்டுக்கு 28,000 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக ஆண்டுக்கு 17,000 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கையை உயர்த்துவதற்கு மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் ஆண்டுதோறும் 28,000 தெருநாய்களுக்கு கருத்தடை: மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.

Related Stories: