மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வறட்சியின் பிடியில் சிக்கிய ஏரிகள்-தூர்வார விவசாயிகள் கோரிக்கை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கோடைகால வறட்சியால் ஏரிகள் வறண்டு உள்ளன. இதைபயன்படுத்தி ஏரி, கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 74 ஏரிகளும், ஊரகத்துறை கட்டுப்பாட்டில் 600க்கும் மேற்பட்ட சிறிய ஏரி, குளங்கள் உள்ளன. இந்த ஏரிகளில் பல ஏரிகள் நிரம்பி உள்ளது. அதேபோல், அணைகளின் நீர்பாசன ஏரிகள் குறைவாக உள்ளன. கடந்த 2 ஆண்டிற்கு முன்பு அதிக பருவமழை பெய்யவில்லை. இதனால், கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடிநீர் 900 அடிக்கு கீழ் சென்றது. மேலும், ஏரிகள் வறண்டு காணப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டு சராசரி மழையைவிட அதிக மழை பெய்தது. இதையடுத்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து ஏரிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. தற்போது, கோடை காலம் தொடங்கியுள்ளதால், ஏரிகளில் நீர் வற்றி உள்ளது. தற்போது வறண்ட ஏரிகளில் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. அன்னசாகரம் ஏரி, ராமக்காள் ஏரி, அதியமான்கோட்டை ஏரி, லளிகம் ஏரி, ரெட்டி ஏரி, கொங்குச்செட்டிப்பட்டி ஏரி, மாதேமங்கலம் ஏரி, சோகத்தூர் ஏரி, புலிகரை ஏரி, அதியமான்கோட்டை, கடகத்தூர் சோழவராயன் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இதை பயன்படுத்தி ஏரிக்கு வரும் கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கோடை காலத்தால் ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் மழைநீர் தேங்குவதற்கு முதல்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் ஏரிகளில் முளைத்துள்ள முட்செடிகள், புதர்களை அகற்றி, கால்வாய்களை தூர்வார வேண்டும் என்றனர். …

The post மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வறட்சியின் பிடியில் சிக்கிய ஏரிகள்-தூர்வார விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: