கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்துவிட்டு சென்னை வந்தவருக்கு தீவிர சிகிச்சை

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(38). இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் சென்னை எம்ஜிஆர் நகரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.  கடந்த 17ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி, பிறகு கள்ளக்குறிச்சிக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் விஷ சாராயம் ஒரு பாக்கெட் குடித்தாக கூறப்படுகிறது. அதன் பிறகு சற்று உடல் நலக்குறைவுடன் நேற்று சென்னைக்கு வந்துள்ளார். பிறகு திடீரென கிருஷ்ணமூர்த்திக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனே கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, விஷ சாராயம் குடித்ததால் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்தனர். அதன்படி கிருஷ்ணமூர்த்தியை நேற்று அதிகாலை அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்ேபட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதித்தனர். தற்போது அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்துவிட்டு சென்னை வந்தவருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: