மருத்துவ கல்லூரி ராகிங் குற்றவாளிகளை மாணவி வேடத்தில் சென்று பிடித்த பெண் போலீஸ்

போபால்: மாணவி வேடத்தில் மருத்துவக்கல்லூரிக்கு சென்று ராகிங்கை கண்டுபிடித்த பெண் போலீசுக்கு பாராட்டு குவிந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவி எண்ணுக்கு புகார் வந்தது.  கடந்த ஜூலை 24ம் தேதி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் ராகிங் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.  இதையடுத்து, 24 வயதான பெண் போலீஸ் ஷாலினி சவுகான் கல்லூரிக்கு மாணவி போல அனுப்பிவைக்கப்பட்டார். அனைத்து மாணவர்களுடனும் நன்கு பேசிப் பழகி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் விவரங்களையும் அவர் திரட்டினார். அது மட்டுமல்லாமல்  ஒரு பெண் போலீஸ் செவிலியர் போலவும், 2 ஏட்டுகள்  உணவக ஊழியர்கள் போலவும் பணியில் சேர்ந்து, இந்த ராகிங் கொடுமையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்துள்ளனர். போலீசார் மாறுவேடத்தில் கல்லூரிக்குள் நுழைந்து, ராகிங் நடந்ததா என்பதை உறுதி செய்ததோடு,  இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 மாணவர்களையும் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து 11 மாணவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு 3 மாதங்களுக்கு கல்லூரியிலிருந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்….

The post மருத்துவ கல்லூரி ராகிங் குற்றவாளிகளை மாணவி வேடத்தில் சென்று பிடித்த பெண் போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: