மதுக்கரை பகுதியில் நெரிசல்மிக்க வாக்குச்சாவடிகளை எஸ்பி ஆய்வு

மதுக்கரை, மார்ச் 31: மதுக்கரை பகுதியில் உள்ள நெரிசல் மிகுந்த வாக்குச்சாவடிகளை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஸ்ணா கல்லூரி, மல்லையன் மெட்ரிகுலேஷன் பள்ளி, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள பகுதிகளில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் மேற்கண்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவின் போது கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதுபோன்ற கூட்ட நெரிசல் அதிகமுள்ள வாக்குச்சாவடிகளை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதுக்கரை பகுதிக்கு வந்த எஸ்.பி.பத்ரிநாராயணன் மேற்கண்ட இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று, அங்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பதையும் கேட்டறிந்தார்.

The post மதுக்கரை பகுதியில் நெரிசல்மிக்க வாக்குச்சாவடிகளை எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: