மக்களுடன் முதல்வர் முகாமில் மக்களிடமிருந்து 457 மனுக்கள் வந்தன

திருவாரூர், ஜூலை 12: திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூர் என 4 நகராட்சிகள் மற்றும் நன்னிலம், பேரளம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி மற்றும் முத்துப்பேட்டை என 7 பேரூராட்சி பகுதிகளில் இந்த மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று மொத்தம் 5 ஆயிரத்து 267 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இதில் 90 சதவிகித மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டு அதன் மீது தீர்வு காணப்பட்டது. ந்நிலையில் 2ம் கட்டமாக இந்த மக்களுடன் முதல்வர் முகாமானது நேற்று திருவாரூர் அருகே புலிவலத்தில் புலிவலம், தண்டலை, வேலங்குடி, பெருங்குடி ஆகிய கிராம ஊராட்சிகளுக்குட்பட்டவர்களுக்கு நடைபெற்றது. முகாமை எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி சார்பில் கட்டுமான வரைபட ஓப்புதல், சொத்துவரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம் வேண்டும், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வேண்டுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ்,

திடகழிவு மேலாண்மை, காலி மனை வரிவிதிப்பு மற்றும் வருவாய் துறை, மின் துறை, காவல் துறை, மாற்றுதிறனாளிகள் நலத்துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட துறைகள் குறித்து மொத்தம் 457 கோரிக்கை மனுக்களை பொது மக்கள் அளித்த நிலையில் இம்மனுக்கள் மக்களுடன் முதல்வர் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஆர்.ஓ சண்முகநாதன் தெரிவித்துள்ளார். தில் ஆர்.டி.ஓ சங்கீதா, திருவாரூர் நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், நகராட்சி நியமனகுழு உறுப்பினர் பிரகாஷ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், தாசில்தார் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் முகாமில் மக்களிடமிருந்து 457 மனுக்கள் வந்தன appeared first on Dinakaran.

Related Stories: