மதுராந்தகம், மார்ச் 9: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் உலக மகளிர் தின விழாவையொட்டி மகிளா சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அச்சிறுப்பாக்கம் வட்டாரம் சார்பில், தோழியர் சங்க உறுப்பினர்களுகான பாலின விழிப்புணர்வு குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதில், ஊராட்சியில் உள்ள அனைத்து மகளிர் குழுக்களும் கலந்து கொண்டனர். முடிவில், உலக மகளிர் தினத்தை ஒட்டி கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர். இதில், ஊராட்சி மன்ற தலைவர் வரதன், துணை தலைவர் விஜயகுமார், மகளிர் வட்டார வல்லுநர் சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்து மகளிர் பாதுகாப்பு குறித்தும் போதை ஒழிப்பு குறித்தும் பேசினர்.
இந்நிகழ்ச்சியில்,வார்டு உறுப்பினர்கள் ஜான்பாஷா, சரளாலிங்கநாதன், ஊராட்சி செயலாளர் ராஜசேகர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, வேடந்தாங்கல் ஊராட்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி மகிளா கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வேதாசலம் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் தானப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் உரிமை குறித்தும், சுகாதாரம் குறித்தும், தனிநபர் பாதுகாப்பு குறித்தும் பேசினர். இக்கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இறுதியாக ஊராட்சி செயலர் சாமிநாதன் நன்றி கூறினார்.
The post மகளிர் தினத்தையொட்டி மகிளா சபை கூட்டம் appeared first on Dinakaran.