மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் வாயிலாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை-4, இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை-2, ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டு தோறும் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் இராணி மேரி கல்லூரி (த) மற்றும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வலைதளத்தில் 14.11.2022 தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து 20.11.2022 தேதிக்குள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுத் தேர்வு, நேர்காணல் மற்றும் பயிற்சி வகுப்புகள் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும். விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதிகள் மற்றும் தேர்வு சம்மந்தமான விவரங்கள் அனைத்தும் விண்ணப்ப படிவத்திலும், கல்லூரியின் வலைதளங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.வலைதள முகவரி:1. இராணி மேரி கல்லூரி (த)     :  www.queenmaryscollege.edu.in2. ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி (த)    : www.smgacw.org…

The post மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: