பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை கண்டித்த அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அடி உதை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை கண்டித்த அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு கல்லூரி மாணவர்கள் அடி உதையில் ஈடுபட்டனர் . பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை ஓட்டுநர் ஜெயராம் கண்டித்துள்ளார். சத்திரரெட்டியாபட்டி நிறுத்தத்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடியே பயணம் செய்துள்ளனர், அவர்களை பஸ்ஸில் உள்ளே எற சொன்னது போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.விருதுநகர் பேருந்து நிலையத்தில் இறங்கிய மாணவர்கள் ஒட்டுநர் ஜெயராமை தாக்கியுள்ளார், ஜெயராம் தாக்கப்பட்டதை தடுத்த நடத்துனர் முத்துராஜ் மற்றும் மற்றொரு பேருந்து ஓட்டுநர் பெரிய கருப்பனையும் தாக்கியுள்ளனர். லேசான காயமடைந்த ஓட்டுநர், நடத்துனர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் வந்த போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.      …

The post பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை கண்டித்த அரசு பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு அடி உதை appeared first on Dinakaran.

Related Stories: