பெரியபாளையம் பஜார் வீதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வு

பெரியபாளையம், ஜூலை 7: பெரியபாளையம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனர். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பஜார் வீதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், பாணி பூரி கடைகள், பாஸ்ட் புட் கடைகள், தள்ளுவண்டி கடைகள், சாலை ஓர உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் உத்தரவின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏரோமியா அந்தோணி ராஜ் தலைமையில், போலீஸ் பாதுகாப்புடன் எல்லாபுரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கார்மேகம் கடை, கடையாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான சிக்கன், பீப் அளவுக்கு அதிகமான அளவில் கலர் சேர்க்கப்பட்ட காலிபிளவர், உடலுக்கு தீங்கும் விளைவிக்கக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட பாணி பூரி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதால் தலா ₹2,000ம் விதம் மொத்தம் ₹6,000ம் அபராத தொகையை வசூல் செய்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டது பெரியபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பெரியபாளையம் பஜார் வீதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: