திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தும் திட்டம்

திருத்தணி, செப். 12: திருத்தணி முருகன் கோயிலில், பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தும் திட்டத்திற்காக சென்னை கியூப் ஐஐடி சார்பில் நவீன இயந்திரங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் திமுக அரசு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றது.

இதில், ஒரு பகுதியாக மலைக்கோயிலில் மாடவீதியை விரிவுபடுத்துவது, புதிய திருமண மண்டபங்கள் அமைப்பது, மாஸ்டர் பிளான் செயல்படுத்துவது உள்ளிட்ட புதிய திட்டங்கள் செயலாக்கம் தொடர்பாக இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை கியூப் ஐஐடி விலங்கியல் நிபுணர் அன்பு அரசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த சில நாட்களாக திருத்தணி முருகன் கோயிலில் அதிநவீன இயந்திரங்கள் மூலம் மலைக்கோயில் மாடவீதியில் மண் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மலைக்கோயிலில் 10 இடங்களில் மண் பரிசோதனை மேற்கொண்டு மண் வலிமையை தீர்மானிக்கும் பரிசோதனை முடிவுகள் இந்து அறநிலையத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக திட்ட அதிகாரி அன்பு அரசன் தெரிவித்தார்.

The post திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு வசதிகள் மேம்படுத்தும் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: