பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம்: எம்எல்ஏ வழங்கினார்

 

ஊத்துக்கோட்டை, செப். 11: திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக நிர்வாகிகளுக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தங்க மோதிரம் வழங்கினார். ஊத்துக்கோட்டையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பேரூர் அவைத்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் வரவேற்றார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், நிர்வாகிகள் ஜெயராமன், சீனிவாசன், பார்த்திபன், திரிபுரசுந்தரி, கோல்டுமணி, கோகுல் கிருஷ்ணன், பிரபாவதி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். பின்னர் கடந்த எம்பி தேர்தலில் ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் அதிக வாக்குகள் பெற்றுத்தந்த துணைச்செயலாளர் பார்திபனுக்கும், ஊத்துக்கோட்டை பேரூர் பகுதியில் 10 வாக்குச் சாவடியிலும் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தந்த பேரூர் செயலாளர் அபிராமிக்கும் தங்க மோதிரம் வழங்கினார் .

கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பகலவன், ஸ்டாலின், கதிரவன், அன்புவாணன், உமாமகேஸ்வரி, ரமேஷ், வெங்கடாசலபதி, குணசேகரன், ஒன்றியச் செயலாளர் மணிபாலன், பொன்னுச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் ஒன்றிய பிரதிநிதி கவுஸ்பாஷா நன்றி கூறினார்.

The post பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: