பாட்லா ஹவுஸ் வழக்கில் அரீஜ் கான் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி பாட்லா ஹவுஸ் துப்பாக்கிச்சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட அரீஜ் கான் குற்றவாளி என செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு டெல்லியில் உள்ள பாட்லா ஹவுஸ் என்ற பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். அப்போது தப்பி ஓடிய அரீஜ் கான் என்பவரை நேபாள எல்லையில் டெல்லி காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. இதில், நீதிபதி சந்தீப் யாதவ் நேற்று தீர்ப்பை வழங்கினார். அதில்,‘‘பாட்லா ஹவுஸ் வழக்கில் கைது செய்யப்பட்ட அரீஜ் கான் மீதான அனைத்து குற்றங்களுக்கும் போதிய ஆதாரங்கள் உள்ளது. அதனால் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அவருக்கான  தண்டனை விவரங்கள் வரும் 15ம் தேதி 12 மணிக்கு அறிவிக்கப்படும்’’ என உத்தரவிட்டார்….

The post பாட்லா ஹவுஸ் வழக்கில் அரீஜ் கான் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: