பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடைத்தேர்வு போலீசார் அதிரடி விசாரணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நிறைவு

திருச்சி, ஆக.10: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நேற்று நிறைவடைந்ததை அடுத்து அவை வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வைத்து பூட்டி, சீல் வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் கடந்த ஜூலை 4ம் தேதி தொடங்கியது. திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பழைய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு கட்டிடத்தில் பாதுகாப்பாக வைத்து சீலிடப்பட்டுள்ளது. இங்கு 6,841 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்), 3,363 கட்டுப்பாட்டு கருவி (கன்ட்ரோல் யூனிட்), 4,219 ஒப்புகை சீட்டு கருவிகள் (விவி பேட்ஸ்) வைக்கப்பட்டுள்ளது. அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்ற முதல்நிலை சரிபார்ப்புப் பணிகள் துவங்கியது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த இப்பணிகள் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, அந்த இயந்திரங்கள் அனைத்தும் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் (ஸ்ட்ராங் ரூம்) திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பிரதீப்குமார் முன்னிலையில் வைத்து பூட்டப்பட்டு, அந்த அறைக்கு சீலிடப்பட்டது. தேர்தல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடைத்தேர்வு போலீசார் அதிரடி விசாரணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: