நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைக்க வாய்ப்புள்ளதா?….ஆய்வு செய்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க   நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட  பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சாத்திய கூறுகள் உள்ளதா என்று ஆய்வு  செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு  அரசுக்கு ஐகோர்ட்  உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை  தடுக்க கடற்கரைகள், அபாயகரமான குளங்கள் மற்றும் அருவிகள் உள்ளிட்ட   நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும், 24 மணி நேரமும்  நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற பாதுகாப்பு குழுவை பணியமர்த்த வேண்டும்,  கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன்  சென்னை உயர் நீதிமன்றத்தில் கோட்டீஸ்வரி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, மனுதாரரின்  பரிந்துரைகளை செயல்படுத்துவது என்பதால் இதுகுறித்து பதில் அளிக்க  அவகாசம் வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த  நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைகளை அமல்படுத்துவது அரசின் கொள்கை  முடிவுதான். இருந்தபோதிலும், மனுதாரரின் கோரிக்கைகளை செயல்படுத்த சாத்திய  கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய  வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு  தள்ளிவைத்தனர்….

The post நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைக்க வாய்ப்புள்ளதா?….ஆய்வு செய்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: