நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு..!!

டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் ரயில்வே பாதுகாப்பு போலீசால் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆப்ரேஷன் நான்ஹா ஃபாரஸ்டி என்ற திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 344 சிறுமிகள் உள்பட 1,045 சிறார்கள் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஷின் ஹீவன் ரக்ஷா திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட 42 பேரை ரயில்வே பாதுகாப்பு போலீசார் மீட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ரயில்களில் கடத்த முயன்ற நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள், 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக 87 பேர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் வீட்டில் யாராவது அடித்தாலோ அல்லது குடும்ப பிரச்னைகளால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுக் கிளம்பி ரயில் நிலையங்களின் நடைமேடையிலோ அல்லது ரயிலிலோ தஞ்சம் அடைகிறவர்களை விசாரித்து பின் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள் என ரயில்வே பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. …

The post நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையங்கள் மூலம் கடத்தப்படவிருந்த 1,045 சிறார்கள் மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: