யுபிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதால் டிஸ்மிஸ்: மாஜி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா துபாய்க்கு தப்பி ஓட்டம்

மும்பை: யுபிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, டிஸ்மிஸ் செய்யப்பட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர் துபாய்க்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், புனே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சிக்காக நியமிக்கப்பட்டிருந்த போது பல சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து பூஜா கேத்கரின் ஐஏஎஸ் தேர்ச்சியை ரத்து செய்த யுபிஎஸ்சி, வரும் காலங்களிலும் அவர் தேர்வெழுத தடை விதித்தது. இந்த முறைகேடு தொடர்பாக யுபிஎஸ்சி கொடுத்த புகாரின் பேரில் பூஜா மீது டெல்லி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பூஜா கேத்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எந்த நேரத்தில் கைதாக வாய்ப்பு இருப்பதால் பூஜா துபாய்க்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே துப்பாக்கி காட்டி விவசாயியை மிரட்டிய வழக்கில் கைதான பூஜா கேத்கரின் தாய் மனோரமாவுக்கு புனே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

The post யுபிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதால் டிஸ்மிஸ்: மாஜி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா துபாய்க்கு தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: