நாடகத்துக்கு குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்

சென்னை: தமிழ் நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் நாடகத்துக்கு குரல் கொடுத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படங்கள் ஒலிச்சித்திரமாக வெளியாகும். ரேடியோவில் ஆடியோ நாடகங்கள் ஒளிபரப்பாகும். அந்த பாணியில் தற்போது புகழ்பெற்ற ஆங்கில நாவல்கள் ஆடியோ நாடகமாக தயாரிக்கப்பட்டு வெளியாகிறது. அந்த வரிசையில் டிசி என்ற நிறுவனம் வெளியிட்ட ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ என்ற ஆடியோ நாடகம் உலகப் புகழ்பெற்றது. தற்போது 3ம் பாகம் வெளியாகி இருக்கிறது. இதில் ஸ்ருதிஹாசன் ஒரு வீட்டு பணிப்பெண் கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இசைக்கலைஞராக தொடரும் என் பயணத்தில், ‘தி சான்ட்மேன்: ஆக்ட்’ என்ற ஆடியோ நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. தற்போது அது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கிய நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடைய நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்….

The post நாடகத்துக்கு குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன் appeared first on Dinakaran.

Related Stories: