நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளுக்கான பிளான் அப்ரூவல் தாமதமின்றி வழங்க வேண்டும் ஐக்கிய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜூலை 13: குமரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பொன்னுலிங்க ஐயன், விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளை புதுப்பிக்க பிளான் அப்ரூவல், அனுமதி வழங்கப்படாமல் இருந்தன. ஒருங்கிணைந்த கட்டிட விதிமுறை என காரணம் கூறி வரைபட அனுமதி வழங்காததால், நாகர்கோவில் மாநகர பகுதிகளில் வீடுகளை புதுப்பிக்க தேவையான லோன் வசதி பெற முடியாத நிலை இருந்தது. விதிமுறையை திருத்தி ஆணை வெளியிட வேண்டும். பழைய வீடுகளை இடித்து கட்ட பிளான் அப்ரூவல் வழங்க வேண்டும் என ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.

தற்போது விதிமுறைகளை திருத்தி பிளான் அப்ரூவல் வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உதவிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. எப்.எம். ராஜரத்தினம் ஆகியோருக்கும், பொதுமக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு ஆகியோருக்கும் எங்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உத்தரவை காலதாமதம் இல்லாமல் செயல்படுத்தி, உடனடியாக பிளான் அப்ரூவல் வழங்க மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் அரவிந்த் கிருஷ்ணா ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளுக்கான பிளான் அப்ரூவல் தாமதமின்றி வழங்க வேண்டும் ஐக்கிய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: