நாகர்கோயில் – திருவண்ணாமலை விரைவு பேருந்தில் பஸ் கண்டக்டரிடன் பணம் அபேஸ்

 

பெரம்பலூர், ஆக. 21: பஸ்சின் கண்டக்டர் பையிலிருந்த பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து நாகர்கோவில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. கன்னியாகுமரி மாவட்டம், பொன்மலை, சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் கவுண்டப்பன்(42) என்பவர் கண்டக்டராகப் பணியில் இருந்தார்.
டிரைவர் செல்வக்குமார் (45) பேருந்தை ஓட்டிச்சென்றார். பஸ் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் வந்து கொண்டிருந்தது அப்போது கண்டக்டர் கவுண்டப்பன் அதுவரை பெறப்பட்ட டிக்கெட் பணம் ரூ 27,200ஐ எண்ணி சரி பார்த்துவிட்டு, தனது கண்டக்டர் ஹேண்ட் பேக்கில் வைத்துள்ளார்.

அந்த அரசு பஸ் பெரம்பலூர் புது பஸ்டாண்டுக்குள் நுழைந்தவுடன் பஸ்சை நிறுத்திய டிரைவர் செல்வக்குமார், பயணிகள் கீழே இறங்கி டீ, காப்பி, வடை சாப்பிட்டு விட்டு வரலாம் எனத்தெரிவித்தார். தனது ஹேண்ட் பேக்கை பஸ்சில் வைத்து விட்டு கீழே இறங்கிய கண்டக்டர் கவுண்டப்பன், மீண்டும் பஸ்சில் ஏறி தனது கண்டக்டர் ஹேண்ட் பேக்கைப் பார்த்துள்ளார். பேக் பத்திரமாக இருந்து. ஆனால் பேக்கில் வைத்திருந்த ரூ.27,200த்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கண்டக்கர் கவுண்டப்பன், இதுகுறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கண்டக்டர் கவுண்டப்பன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தீவிரமாக தேடுகின்றனர்.

The post நாகர்கோயில் – திருவண்ணாமலை விரைவு பேருந்தில் பஸ் கண்டக்டரிடன் பணம் அபேஸ் appeared first on Dinakaran.

Related Stories: