நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வாக்களிக்க முடியவில்லை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களிக்கவில்லை.தமிழகத்தில், அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வார்டு கவுன்சிலர் பதவிக்கு நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது.

அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். ஆனால், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வாக்களிக்கவில்லை.தமிழகத்தில், கடந்த அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி பகுதியில் வாக்கு உள்ளது. அவர் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து விட்டதால், நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வாக்களிக்க முடியவில்லை appeared first on Dinakaran.

Related Stories: