நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 99 பேர் வேட்புமனு தாக்கல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கடந்த 2 நாளில் 99 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இம்முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி நிலவுகிறது. அதன்படி, 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இதுதவிர, சுயேச்சை வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 28ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. நேற்று வரை மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு 22 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 30 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 47 பேரும் என மொத்தம் இதுவரை 99 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்புமனுக்கள் வரும் பிப்ரவரி 4ம் தேதி வரையில் பெறப்படுகிறது. பிப்ரவரி 5ம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். 7ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 99 பேர் வேட்புமனு தாக்கல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: