தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்று வீடு திரும்பிய விவசாயி மகள்-பெற்றோர்கள், கிராமமக்கள் உற்சாக வரவேற்பு

குத்தாலம் : தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்குயிடையிலான 61வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் நடந்தது. இதில் ‘போல்ட்வால்ட்’ என்று அழைக்கப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி இளங்கோவன் மகள் பரணிகா தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பரணிகா 4.05 மீட்டர் அளவிற்கு உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளார். தேசிய அளவிலான தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று ஊர் திரும்பிய பரணிக்காவிற்கு பெற்றோர்கள் மற்றும் கிராமமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பது என்னுடைய ஆசை எனவும், அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும் பரணிகா தெரிவித்தார்….

The post தேசிய தடகள போட்டியில் தங்கம் வென்று வீடு திரும்பிய விவசாயி மகள்-பெற்றோர்கள், கிராமமக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: