தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்: தலைவர்கள் மரியாதை

டெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்திக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்காட்டில் அஞ்சலி செலுத்தினார். துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி கூறுகையில், மகாத்மா காந்தியின் கொள்கைகள் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை, பல கோடி மக்களுக்கு பலம் கொடுப்பவை என பிரதமர் டிவிட் பதிவிட்டுள்ளார். பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். டெல்லி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையொட்டி விஜய் காட்டில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தில் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வருடன் , ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்களும் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். …

The post தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாள் இன்று கொண்டாட்டம்: தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: