துருவை பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 2 பேரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

*22 பறவைகள், உரிமம் இல்லாத துப்பாக்கி, பைக் பறிமுதல்திண்டிவனம் : வானூர் அருகே வயல்வெளி பகுதியில் பறவைகளை துப்பாக்கியால் வேட்டையாடிய 2 பேரை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.திண்டிவனம் அடுத்த வானூர் அருகே உள்ள துருவை வயல்வெளி பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் சென்று பார்த்தபோது நரிக்குறவர் இரண்டு பேர் துப்பாக்கியால் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், பொதுமக்களிடம் இருந்து பறவைகளை வேட்டையாடிய நரிக்குறவர்களை மீட்டு திண்டிவனம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை அடுத்த கருவடிக்குப்பம் நரிக்குறவர் பகுதியைச் சேர்ந்த தோகைப்பாடி மகன் முருகன்(27), அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் மகன் பிரபு (38), என்பதும், இவர்கள் புதுச்சேரி மாநில பகுதியை ஒட்டி உள்ள தமிழக எல்லையில் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடி, விற்பனை செய்துவந்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து நத்தைகொத்தி நாரை, வெள்ளை கொக்கு, நாரை உள்ளிட்ட 22 பறவைகள், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்….

The post துருவை பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 2 பேரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: