துப்பாக்கி கலாச்சாரத்திற்கு கடிவாளம் : நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கு தகுதியான வயது 18ல் இருந்து 21 ஆனது!!

நியூயார்க் : அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் வகையில், நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி பயன்பாட்டுச் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த மாதம் கவச உடை அணிந்த 18 வயது இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 ஆப்ரிக்க, அமெரிக்கர்கள் பலியாகினர். இதில் கறுப்பின சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என கொலையாளி ஒப்புக் கொண்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோபிடன் கைத் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்குமாறு மாகாண அரசுகளை கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், நியூயார்க் நகரில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை 18ல் இருந்து 21 ஆகஉயர்த்தி சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் புல்லட் புரூப் உள்ளாடை போன்ற உடல் கவசம் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை ஆவண காப்பகத்தின் படி 2022ம் ஆண்டில் இதுவரை 18,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 10,000 பேர் தற்கொலை செய்து கொண்டனர். நியூயார்க் மாகாணத்தை தொடர்ந்து இதர மாகாண அரசுகளும் துப்பாக்கி பயன்படுத்தும் உரிமையில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர முடிவு செய்துள்ளன. …

The post துப்பாக்கி கலாச்சாரத்திற்கு கடிவாளம் : நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கு தகுதியான வயது 18ல் இருந்து 21 ஆனது!! appeared first on Dinakaran.

Related Stories: