(தி.மலை) 24 அடி உயர பாகுபலி சுவாமி சிலை பிரதிஷ்டை ஏராளமானோர் தரிசனம் வந்தவாசி அருகே ஜெயின் கோயிலில்

வந்தவாசி, மே 11: வந்தவாசி அடுத்த பொன்னூர் ஜெயின் கோயிலில் 24 அடி உயர பாகுபலி சுவாமி சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை ஏராளமான ஜெயினர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயில் முன்பகுதியில் 24 அடி உயரம் கொண்ட பாகுபலி சுவாமி சிலை வைக்க ஜெயின் சமூகத்தினர் முடிவு செய்தனர். தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரத்தில் 24 அடி உயரம் கொண்ட பாகுபலி சுவாமி சிலை செய்யப்பட்டு, 20 டயர்கள் கொண்ட கனரக லாரியில் பொன்னூர் கிராமத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. அந்த லாரி மேல்மருவத்தூர், கீழ்கொடுங்காலூர், வந்தவாசி, திண்டிவனம் சாலை, இளங்காடு கூட்ரோடு வழியாக பொன்னூர் கிராமத்திற்கு சென்றது. இதையடுத்து, நேற்று ஜெயின் கோயில் முன்பகுதியில் 2 ராட்சத கிரேன் மூலம் பாகுபலி சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம், போளூர், ஆரணி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜெயினர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post (தி.மலை) 24 அடி உயர பாகுபலி சுவாமி சிலை பிரதிஷ்டை ஏராளமானோர் தரிசனம் வந்தவாசி அருகே ஜெயின் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: