200 சாதுக்கள் பங்கேற்ற ேயாகா நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்

திருவண்ணாமலை, ஜூன் 26: உலக யோகா தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 200க்கும் மேற்பட்ட சாதுக்கள் பங்கேற்ற சிறப்பு யோகா நிகழ்ச்சி நேற்று நடந்தது. உலக யோகா தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேர்அண்ணாமலையார் கோயில் பின்புறம், சிவனடியார் சாதுக்கள் சேவா அறக்கட்டளையில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட சாதுக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது, பத்மாசனம், வஜ்ராசனம், தாடாசனம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட யோகாசன முறைகளை பயிற்சி அளித்தனர். சாதுக்களின் உடல் நலன் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையிலும், உலக நன்மை வேண்டியும் இந்த ேயாகா பயிற்சி அளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து இந்த யோகாசனங்களை சாதுக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சியில், யோகாசன ஆசிரியர் சுரேஷ்குமார், நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post 200 சாதுக்கள் பங்கேற்ற ேயாகா நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் appeared first on Dinakaran.

Related Stories: