திருப்புத்தூர் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், அண்ணா மறுமலர்ச்சி கிராம திட்ட பஞ்சாயத்துகளில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து திருக்கோஷ்டியூர், காரையூர், பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி, வேலங்குடி, இ.அம்மாபட்டி ஆகிய பஞ்சாயத்துகளில் அனைத்து துறை சிறப்பு முகாம் நடந்தது. சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொ) தனபாலன் தலைமை வகித்து, ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக எடுத்து கூறினார். திருப்புத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா, துறை மூலம் வழங்கப்படும் இடுபொருட்கள், உழவர் கடன் அட்டை, மண் மாதிரி எடுத்தல் குறித்து பேசினார். தொடர்ந்து முகாமில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பங்கேற்றவர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் வருவாய்த்துறையினர் சார்பில், பட்டா மாறுதலுக்கான ஆணை மற்றும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. கால்நடை துறையினர் சார்பில், கால்நடை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணியன், செந்தமிழ்ச்செல்வி மதியழகன், வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, துணைவேளாண்மை அலுவலர் ஜெயபிரகாஷ், உதவி பொறியாளர் பாஞ்சாலி, வருவாய் ஆய்வாளர் கண்ணன், விஏஓக்கள் நல்லழகு, ஐரிஷ் அஸ்மி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுதர்சன், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராதா, கிருஷ்ணவேணி, ஷீலா பிரியா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்….

The post திருப்புத்தூர் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: