தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை லக்கிம்பூரில் விவசாயிகளை கொன்ற குற்றவாளிகள் யார்?: அறிக்கை தாக்கல் செய்ய உபி. அரசுக்கு உத்தரவு

புதுடெல்லி: லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் யார் குற்றவாளி, எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூரில் அரசு விழாவில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் உபி துணை முதல்வர் கேசவ் மவுரியா, ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்றனர். அப்போது, அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றி 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விவசாயிகள் நடத்திய தாக்குதலில் பாஜவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.   ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராதான் காரை எற்றி விவசாயிகளை கொன்றதா குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், லக்கிம்பூர் சம்பவம் பற்றி உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இது, தலைமை நீதிபதி என்வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹேமா கோலி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இந்த சம்பவம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்படி கடிதம் எழுதிய 2 வழக்கறிஞர்கள் உட்பட மூன்று பேரின் செயல்பாட்டை நீதிமன்றம் வரவேற்கிறது. இதில், அந்த வழக்கறிஞர்களின் கருத்துக்களை கேட்க, நீதிமன்றம் விரும்புகிறது,’ என தலைமை நீதிபதி தெரிவித்தார்.இதையடுத்து. நீதிமன்றத்துக்கு வந்திருந்த அந்த 2 வழக்கறிஞர்களும், ‘நிர்வாக தவறுகளால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால்தான், பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இது குறித்து தற்போது வரையில் எந்த சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,’ என கோரிக்கை வைத்தனர். உத்தரப் பிரதேச அரசு தரப்பு வழக்கறிஞர் செய்த வாதத்தில், ‘லக்கிம்பூர் சம்பவம் பற்றி விசாரிக்க, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உபி அரசு அமைத்துள்ளது. இது, 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்.  மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்,’ என தெரிவித்தார்.பின்னர், தலைமை நீதிபதி ரமணா பிறப்பித்த உத்தரவில், ‘லக்கிம்பூர் வன்முறையில் யாரெல்லாம் குற்றவாளிகள்? அவர்கள் கண்டறியப்பட்டு விட்டார்களா? எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள் என்ன? இது பற்றிய விரிவான அறிக்கையை நாளைக்குள் (இன்று) உத்தரப் பிரதேச அரசு தாக்கல் செய்ய வேண்டும்,’ என கூறி, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையம்லக்கிம்பூர் சம்பவம் பற்றி விசாரிப்பதற்காக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை உபி அரசு நேற்று அமைத்தது. இது தனது விசாரணை அறிக்கையை 2 மாதத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.பிரியங்கா காந்தி எதிர்ப்புஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ள உபி அரசுக்கு  காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்….

The post தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை லக்கிம்பூரில் விவசாயிகளை கொன்ற குற்றவாளிகள் யார்?: அறிக்கை தாக்கல் செய்ய உபி. அரசுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: