சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக சட்டப் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடப்பதை அடுத்து, அன்றைய தினம் பொது விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நாளில் கன்னியாகுமரி எம்பி தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடக்க உள்ளது. வாக்குப் பதிவு நடக்கும் நாளான ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சத்தின் விதிகளின் படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் தமிழக  ஆளுநரும் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டப் பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடப்பதை அடுத்து ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: