தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை

சென்னை: நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாததால், இந்தாண்டு பொதுத்தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்காக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று 10-ம் வகுப்பு மாணாவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை இன்று துவங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4,60,247 மாணவிகள், 4,78,089 மாணவர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9,38,337 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுதேர்வு எழுத்தவுள்ளனர். புதுச்சேரியில் 8,272 மாணவிகளும், 8,530 மாணவர்களும் என மொத்தம் 16,802 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3,888, புதுவையில் 48 என மொத்தம் 3,936 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. மேலும், 30,765 தனித் தேர்வர்களும், 242 சிறைவாசிகளுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 3,050 பறக்கும் படைகளும், 1,241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு படைகளும் நியமிக்கப்பட்டுள்ளன.           …

The post தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: ஒழுங்கீனங்களில் ஈடுபட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: