தண்ணீருக்காக வனங்களை விட்டு மான்கள் வெளியேறி விபத்தில் உயிரிழப்பு: வெண்பாவூரில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறை தீவிரம்

பெரம்பலூர்:தண்ணீருக்காக வனங்களைவிட்டு மான்கள் வெளியேறி விப த்துகளால் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து . தண்ணீர்த் தொட்டிகளில் நீர்நீரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகாவில் வெண்பாவூர், பா ண்டகப்பாடி, வ.மாவலிங் கை, பில்லங்குளம், அய்ய னார் பாளையம், காரியா னூர், மேட்டுப்பாளையம், ரஞ்சன்குடி, அரசலூர் பகு திகளிலும், பெரம்பலூர் தா லுக்காவில் சத்திரமனை, மேலப்புலியூர், நாவலூர், இரட்டைமலை சந்து, திருப் பெயர், குரும்பலூர் ஆகிய பகுதிகளிலும், குன்னம் தா லுக்காவில் சித்தளி,பேரளி ஆகிய இடங்களிலும், ஆல த்தூர் தாலுக்காவில் பாடா லூர், நக்கசேலம் உள்ளிட்ட பகுதிகளிலும், வனத்துறை கட்டுப்பாட்டில் காப்புக்காடு களும் சமூக வனக் காடுகளும் அதிகமான பரப்பளவில் உள்ளன.இப்பகுதிகளில் நூற்றுக்க ணக்கான மான்கள், கூட்டம் கூட்டமாக வசித்து வருகின் றன. இவை வனப்பகுதிக ளில் காணப்படும் கடும் வறட்சியால், உணவுக்காக வும் தண்ணீருக்காகவும் வனங்களை விட்டுவெளியே றி வயல்களுக்கும், கிராமங்களுக்குள்ளும் செல்லும் அவலம் ஏற்பட்டுவருகிறது. அப்போது வயல் கிணறுகளில் தவறிவிழுந்து இறப்ப தும், சாலைகளை கடக்கும் போது அடையாளம் தெரி யாத வாகனங்கள் மோதி அடிக்கடிஇறப்பதும், கிராம ங்களுக்குள் நுழையும்போ து தெருநாய்கள் விரட்டிச் சென்று கடிப்பதால் இறப்ப தும் வாடிக்கையாக நிகழ் ந்து வருகிறது. குறிப்பாக ஒரு மாதத்திற்குள்ளாக ஆ த்தூர் சாலையில் எசனை அருகே 3வயது ஆண்மானு ம், பெரம்பலூர் கலெக்டர் அ லுவலகம் அருகே 4 வயது ஆண் மானும் அடையாளம் தெரியாத வாகனம்மோதி பலியானது.இதனைத் தொ டர்ந்து மான்களுக்கு அதன் இருப்பிடமான வனப்பகுதி யிலேயே தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர்வசதியை ச் செய்துகொடுத்தால், மா ன்கள் வனத்தை விட்டு வெ ளியேறுவதும், அதனால் அரிய வகையான புள்ளி மான்கள் இறப்பதும் குறை யும் என சமூக ஆர்வலர்கள் வனவிலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் கோடை கா லமான ஏப்ரல், மே, ஜூன், ஜூலைமாதங்களில் சுட்டெ ரிக்கும் வெப்பத்தின் தாக்க த்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பெரம்பலூர் மாவ ட்ட வனத்துறை சிறப்பு ஏற் பாடுகளைச் செய்து வருகி றது. இதன்படி பெரம்பலூர் மாவட்ட வனஅலுவலர் குக னேஷ் உத்தரவின்படி, வன ச்சரகர்கள் பெரம்பலூர் சசிக்குமார், வேப்பந்தட்டை மா தேஸ்வரன் ஆகியோரது ஏற்பாட்டில் ஒவ்வொரு வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிக ளில் மான்களுக்காக தண் ணீர் நிரப்பும்பணிகள் நடந் து வருகிறது. மேலும் ஏற்கனவே சிதிலமடைந்துக் காணப்பட்ட கசிவுநீர்க்குட்டைகள், சிறிய நீர்நிலைகளைச் சீரமைத்துஅதில் மழைநீர், வாய்க்கால் நீர் தேங்கிநின்று மான்களின் தாகத்தைப் போக்கிட நடவடிக்கஎடுத்து வருகின்றனர். இதனால் மான்கள் வனங்களை விட் டு வெளியேறி வாகன விப த்துகளால் உயிரிழக்கும் அ வலம் குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது….

The post தண்ணீருக்காக வனங்களை விட்டு மான்கள் வெளியேறி விபத்தில் உயிரிழப்பு: வெண்பாவூரில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறை தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: