செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: செங்கல்பட்டு கலெக்டர் ஆய்வு

தாம்பரம், : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும் 28ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில், 187 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.இந்நிலையில் போட்டிக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரவிருக்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்களை விமான நிலையத்திலிருந்து பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக ஓஎம்ஆர் சாலை சென்று அங்கிருந்து மாமல்லபுரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, வீரர்கள் தங்க மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வரும் வீரர்களுக்கு உதவும் வகையில் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செஸ் வீரர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து மகாபலிபுரம் செல்லும் சாலைகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தராஜ் மற்றும் வருவாய் துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் இருந்து பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையை இணைக்கும் மேம்பாலத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் 200 அடி சாலையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார். 200 அடி  சாலையில் இருபுறமும் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆறடி உயர மரக்கன்றுகளை நடும் பணிகளை விரைவாக முடிக்கவும் அவர் உத்தரவிட்டார். பல்லாவரம் பெரிய ஏரி அருகே அகற்றப்பட்டு வரும் குப்பை கிடங்கு பணிகளை விரைவாக முடித்து அந்த பகுதியை முழுமையாக அழகுபடுத்தவும்,  ரேடியல் சாலையில் தனியார் நிலத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை உடனடியாக அகற்றவும், கீழ்கட்டளை ஏரி பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார்….

The post செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: செங்கல்பட்டு கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: