காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை நிரப்ப ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காமராஜர் பல்கலைக்கழகம் மூன்றாவது பெரிய பல்கலைக்கழகமாக உள்ள நிலையில் ஊதியம் வழங்குவதற்கு கூட பணமில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

காமராஜர் பல்கலைக்கழக கடன் சுமையை அகற்ற பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ.500 கோடி நிதி வழங்கிட வேண்டும். பல மாதங்களாக காலியாக இருக்கும் காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவியை நிரப்ப ஆளுநர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

The post காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை நிரப்ப ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: