கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

சென்னை: கோயம்பேடு அங்காடி அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ பிடித்து எறிந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கூலி தொழிலாளி ஒருவரை கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் அருகே தனியார் வாகன பார்க்கிங் இங்கு ஒரு மினிபேருந்து கடந்த 7 வருடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை அந்த பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததுடன் வெடி வெடிப்பது போல் பயங்கர சத்தம் கேட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் வந்து தீயை அணைக்கு முயன்றபோது வேகமாக பரவியதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 ஆட்டோக்கள், லோடு வாகனம் ஆகியவை எரிந்து அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தபோதும் மினி பஸ், ஆட்டோக்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பழனி (45) என்பவரை இன்று அதிகாலை கைது செய்தனர். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்கிறார். இவரிடம் போலீசார் விசாரித்தபோது, ‘’தனியார் பார்க்கிங் பகுதிக்கு சென்று பீடி குடித்து விட்டு துண்டு பீடியை அங்கேயே போட்டுவிட்டு வந்தேன்.

அதன்காரணமாக தீப்பிடித்ததா என்று தெரியாது. மற்றபடி நான் பஸ்சை கொளுத்தவில்லை’ என்றார். இருப்பினும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது; கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பார்க்கிங் உள்ளது. திடீரென குண்டு வெடிப்பது போல் சத்தம் கேட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். வெளியே வந்து பார்த்தபோது புகை மண்டலமாக இருந்தது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தவித்தோம். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்ததால் நிம்மதி அடைந்தோம். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் இதுபோல் சம்பவம் நடக்காமல் பார்த்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

 

The post கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: