“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.7.2024) தலைமைச் செயலகத்திலிருந்து, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் முதல்வரின் முகவரி துறையின் “நீங்கள் நலமா” என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார். அப்போது கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறதா என பயனாளியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார். இதற்கு பதில் அளித்த பயனாளி, “கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,” இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அரசின் உதவித் தொகை உரிய நேரத்தில் வருவதாக முதலமைச்சரிடம் பயனாளிகள் நன்றி தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண், முதலமைச்சரின் காலை உணவு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், ஒலிம்பிக் தேடல், நான் முதல்வன், ‘நம்மை காக்கும் 48, உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர் போன்ற அரசின் திட்டங்கள் குறித்தும் பயனாளிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் திரு.த.மோகன், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்.

The post “நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!! appeared first on Dinakaran.

Related Stories: