சுற்றுலா தளங்களில் குவிந்த பொதுமக்கள்

கிருஷ்ணகிரி, ஜன.18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி, சுற்றுலா தளங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். தமிழகத்தில் கடந்த 15ம் தேதி பொங்கல் விழாவும், 16ம் தேதி மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டது. நேற்று காணும் பொங்கலையொட்டி, அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட மக்களும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பெரியவர்கள் அணை பூங்காவிலும், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களிலும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், அணைப் பகுதியில் உணவு சமைத்து உண்ட பிறகு அணையை சுற்றிப் பார்த்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி அருகில் உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தில், பொதுமக்கள் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

The post சுற்றுலா தளங்களில் குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: